நாகுடி அருகே மணல் கடத்திய சரக்கு வேன் பறிமுதல்.!ஆவுடையார்கோவில் வருவாய் ஆய்வாளர் மணி தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கீழ்குடி கிராமத்தில் வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ½ யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சரக்கு வேன் பறிமுதல் செய்து நாகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த தகவலை ஆவுடையார்கோவில் தாசில்தார் பரணி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments