வடகாட்டில் 6 மாதங்களுக்கு பிறகு வாரச்சந்தை திறப்பு.!வடகாடு பெரிய கடை வீதி அருகே வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது.

இந்த வாரச்சந்தைக்கு புதுக்கோட்டை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சரக்கு வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பழவகைகள், மளிகைபொருட்கள் இறைச்சி போன்றவற்றை ஒரே இடத்தில் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். 

இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 6 மாதங்களாக நிறுத்தி, வைக்கப்பட்டிருந்த வாரச்சந்தை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று திறக்கப்பட்டது. இதனால் வடகாடு மற்றும் சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments