புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு வேம்பு-புங்கன் நடவு செய்ய மானியம்.! மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தகவல்.!!




புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எண்ணெய் வித்து மரப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020--21-ம் ஆண்டு வேம்பு மற்றும் புங்கன் மரப்பயிர்கள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.4 லட்சத்து 23 மானியம் வழங்கப்பட உள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் 400 வேப்பங்கன்றுகள் நடவு செய்வதற்கு ரூ.17 ஆயிரமும், ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்ய ரூ.1000-மும் ஆக ஒரு எக்டருக்கு கூடுதல் மானியம் ரூ.18 ஆயிரம் விவசாயியின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். அதே போல ஒரு எக்டரில் 500 புங்கன் கன்றுகள் நடவு செய்தால் ஊடுபயிர் உளுந்து சாகுபடி உள்பட ரூ.21 ஆயிரம் மானியம் வழங்கப்படும். 

குழி எடுத்தல், உழவு செய்தல், நல்ல செழிப்பான ஒரு வருட கன்றுகள் வாங்கி நடவு செய்தல், ஊடுபயிர் சாகுபடி செய்தல் போன்ற அனைத்து பணிகளையும் விவசாயி சொந்த செலவின் செய்து களப்பணியாளரது பரிந்துரையுடன் மானியம் கோருதல் வேண்டும். 

மேலும் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு பராமரிப்பு செலவு ரூ.2 ஆயிரம் மற்றும் ஊடுபயிர் உளுந்து சாகுபடிக்கு ரூ.1000 ஆக எக்டருக்கு ரூ.3 ஆயிரம் பின்னேற்பு மானியமாக அந்தந்த விவசாயிகளது வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர் பரிந்துரையுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments