புதுக்கோட்டையில் உலக ரேபிஸ் தினத்தையொட்டி நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்.!உலக ரேபிஸ் தினத்தையொட்டி நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் புதுக்கோட்டையில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் பால்பண்ணை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

முகாமை கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் இளங்கோ தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வரும் நாய்களை அழைத்து வந்து வெறிநோய் தடுப்பூசி போட்டனர். கால்நடை மருத்துவர் பாண்டியராஜன் தலைமையிலான குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். 

முகாமில் உதவி இயக்குனர்கள் சாகுல் அமீது, லிடியாஅருட்செல்வி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் 184 நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments