ஆவுடையாா்கோவில் ஒன்றியக் குழு கூட்டம்.!ஆவுடையார்கோவில் ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் உமாதேவி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பிரியா குப்புராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர் செந்தில்குமரன் பேசும் போது, கருப்பூரில் பகுதி நேர அங்காடி வேண்டும். ஆத்மநாத சுவாமி கோவில் திருவிழாவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஒரு மண்டகப்படி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த மண்டகப்படியை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவரை அதற்கான ஏற்பாடு செய்ததாக தெரியவில்லை என்றார். 

கவுன்சிலர் அல்லி முத்து பேசும் போது, சாட்டியக்குடி ஊராட்சியில் பகுதி நேர அங்காடி வேண்டும் என்றார். கவுன்சிலர் சுந்தரபாண்டியன் பேசும் போது, மீமிசல் உப்பள பகுதிகளில் வீடு கட்ட பட்டா கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். கவுன்சிலர் பாண்டி பேசும் போது, திருப்புனவாசலில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். கவுன்சிலர் உதயகுமார் பேசும்போது, செங்கானத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட வேண்டும் என்றார். மேலும் பல கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments