புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று குலுக்கல்.!புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி 25 சதவீத இட ஒதுக்கீட்டில் 2020-21-ம் கல்வி ஆண்டிற்கு இணையதளம் வாயிலாக மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் பெறப்பட்டது.

இதில் 69 மெட்ரிக் பள்ளிகளில் 1,214 இடங்களின் எண்ணிக்கைக்கு 3 ஆயிரத்து 434 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 148 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு 1,883 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இதில் அதிகமாக விண்ணப்பம் பெறப்பட்ட பள்ளிகளில் இன்று (வியாழக்கிழமை) குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments