புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு.!புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கொண்டு வரக்கூடாது என்ற தீர்மானம் கிராம சபை கூட்டங்களில் முன்வைத்து நிறைவேற்றப்பட்டது.

அதேபோல, நாளை (வெள்ளிக்கிழமை) நடக்க உள்ள கிராம சபைக் கூட்டங்களில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களையும் திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற அந்தந்த கிராமங்களில் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். 

இதுதொடர்பாக பல இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும் கோரிக்கை வைத்து மாதிரி தீர்மானங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதனால், நாளை நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் வழக்கமான பயனாளிகள் தேர்வு தீர்மானங்களையடுத்து, வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தும் தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments