புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.




புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

புதிதாக 23 பேருக்கு தொற்று

ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை விளங்கி வந்தது. அதன்பிறகு சென்னை உள்பட பிற மாவட்டங்களில் வேலை பார்த்தவர்கள், பிற மாநிலங்களில் வேலை பார்த்தவர்கள் சொந்த ஊர் திரும்பியதால் மெல்ல மெல்ல தொற்று பரவ தொடங்கியது. இடைப்பட்ட மாதங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50-க்கும் கீழ் பதிவாகி வந்தது.

நேற்று மேலும் குறைந்து புதிதாக 23 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,301 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில்


கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 44 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம், மாவட்டத்தில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 9,804 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோயாளிகள் இல்லை

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததால் கூடுதலாக அமைக்கப்பட்ட தனி சிறப்பு சிகிச்சை மையங்களில் நோயாளிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையில் முககவசம் அணியாமல் சென்றவர்களை பிடித்து அபராதம் விதிப்பதுடன், கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments