டிச.1-ம் தேதிக்குள் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள்: ஏஐசிடிஇ அறிவிப்புபொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு டிச.1-ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக 7 மாதங்களாகக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதைத்
தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பல்கலைக்கழக் மானியக் குழு, கல்லூரிகள் தொடங்கி வகுப்புகள் நடைபெறுவதற்கான கால அட்டவணையைக் கடந்த மாதம் வெளியிட்டது.

இந்நிலையில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (ஏஐசிடிஇ), 2020-21 ஆம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகளைத் தொடங்குவதற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ''இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவர்களுக்கான சேர்க்கைப் பணிகள் அனைத்தும் நவம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிசம்பர் 1-ம் தேதிக்கு உள்ளாக முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments