புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள வெட்டிவயல் கோவில் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் இலக்கியா (வயது 29). இவரது கணவர் மோகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில், இலக்கியா தனது 2 குழந்தைகள் மற்றும் பெற்றோர், சகோதரர் ஆகியோருடன் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் அவர், கலெக்டர் அலுவலக வளாக முன் பகுதியில் கார் நிறுத்துமிடம் அருகே திடீரென மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து இலக்கியாவை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் அவர், தனது குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் விரைந்து வந்து இலக்கியாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது மாமனார், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியது தொடர்பாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த புகாரில் சமாதானம் பேசுவதாக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மற்றும் சிலர் சேர்ந்து தன்னை மிரட்டி வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளிக்க முயன்று போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
மேலும், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தி.மு.க.வை சேர்ந்தவர் என்றார். இதைத்தொடர்ந்து இலக்கியா மற்றும் அவரது குடும்பத்தினரை அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.