பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு: கோட்டைப்பட்டினத்தில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்.!கோட்டைப்பட்டினம் செக்போஸ்ட் அருகில் மாவட்ட த.மு.மு.க சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்பட 32 பேரை லக்னோ சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நேற்று முன்தினம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பினை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக, கோட்டைப்பட்டினம் செக்போஸ்ட் அருகே த.மு.மு.க. சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்ட செயலாளர் ஜகுபர் அலி, மாவட்ட தலைவர் அபுசாலிகு, பொருளாளர் அஜ்மல்கான் மற்றும் ம.ம.க. மாவட்ட செயலாளர் கிரீன் முகமது உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments