மணமேல்குடியில் ரூ.13 லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்.!மணமேல்குடி வடக்கூர் அம்மன்கோவில் வளைவு அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பள்ளமாக இருப்பதால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

இதனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.13 லட்சம் திட்ட மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. 

இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் தொடங்கி வைத்தார். அப்போது, ஒன்றிய பொறியாளர் குருநாதன், மணமேல்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments