கோட்டைப்பட்டினத்தில் கொரோனா ஊரடங்கால் களையிழந்த ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா.!



கோட்டைப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ராவுத்தர் அப்பா தர்கா உள்ளது .இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவிழாக்களில் அளவுக்கு அதிகமான கூட்டம் கூட கூடாது என்று மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியது. வாண வேடிக்கைகள் விடக்கூடாது, தாரை தப்பட்டை அடிக்க கூடாது மற்றும் தர்கா வளாகத்தை சுற்றி கடைகள் ஏதும் இருக்க கூடாது என்ற நிபந்தனைகளுடன் கந்தூரி விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. 

இதனால் நேற்று நடைபெற்ற கந்தூரி விழா களையிழந்து காணப்பட்டது. விழாவில் அளவுக்கு அதிகமான கூட்டம் வந்துவிடாமல் தடுப்பதற்காக புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் மற்றும் 400-க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே தடுப்பு அமைத்து கூட்டம் கூடாத அளவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்த பாதுகாப்பு பணியை திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி. ஆனி விஜயா பார்வையிட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments