உத்தரபிரதேச இளம்பெண் கொலை சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி,ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்.!உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் அன்புமணவாளன், விவசாயிகள் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். 

இதேபோல ஆம் ஆத்மி கட்சியினர் வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாய சங்கத்தினர், கம்யூனிஸ்டு கட்சியினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments