விளானூரில் நீர்பாசன விவசாயிகள் நலச்சங்கம் தொடக்கம்...ஆவுடையார்கோவில் அருகே விளானூரில் புனித அந்தோணியார் நீர் பாசன விவசாயிகள் நலச் சங்க தொடக்கம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கஸ்மீர், செயலாளர் அந்தோணிராஜ், செல்வநாதன், பொருளாளர் சிமியோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

சங்கத்தின் மூலம் விளானூர் பகுதி விவசாயிகளுக்கு அரசின் சலுகைகளை பெற்றுக் கொடுப்பது. பயிர் காப்பீடு தொகையை பெற அரசிடம் கோரிக்கை வைப்பது, விவசாயத்தை பாதுகாக்க பயறு வகைகளை பயிரிடுவது. காவிரி நீர் திட்டத்தில் ஆவுடையார்கோவில் பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் வந்து சேர போராடுவது என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments