கறம்பக்குடி தெற்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் பனை விதைகள் நடவு.!கறம்பக்குடி தெற்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் பனை விதைகள் நடவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, ஒன்றிய செயலாளர் தங்க முருகேசன் தலைமையில் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி, முள்ளங்குறிச்சி, பொன்னன் விடுதி ஆகிய ஊராட்சி பகுதிகளில் குளம் மற்றும் காட்டாற்று கரை ஓரங்களில் பனை விதைகளை நடவு செய்தனர். 

3 ஊராட்சிகளிலும் 2,500 பனைவிதைகள் நடப்பட்டன. அழிந்துவரும் பனை மரங்களை காப்பாற்ற இளைய தலைமுறையினர் எடுத்துவரும் முயற்சிக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments