புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள பொண்ணமங்கலம் கிராமத்தில் தனியார் இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு வட மாநில தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த ராஜ் கிஷோர் (வயது 22) என்பவர் அங்குள்ள மோட்டார் சுவிட்சை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி விசப்பட்ட அவரை அங்குள்ளவர்கள் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மீமிசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments