பேரிடர் காலங்களில் மீட்புப் பணிக்காக மிதக்கும் சைக்கிளை உருவாக்கிய கீழக்கரையை சேர்ந்த இரட்டை சகோதரர்கள்.!!கீழக்கரையைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் பொது மக்களை மீட்பதற்காக மிதக்கும் சைக்கிளை வடி வமைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த இரட்டையர்கள் நசுருதீன் (25), அசாருதீன் (25). ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான இருவரும் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆதரவற்ற சடலங்களை மீட்டு அடக்கம் செய்வது, நீர்நிலைகளில் மூழ்கியவர்களை மீட்பது, கரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றும் வகையில், தண்ணீரில் மிதக்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளனர். இதில் 12 தண்ணீர் கேன்கள், இரும்புக் கம்பிகள், சைக்கிள் சக்கரங்கள், படகுகளைப் போன்று புரொபெல்லர் கொண்டு தயாரித்துள்ளனர்.

இதில் 180 கிலோ எடை வரை கொண்டு செல்லலாம். இந்த மிதவை சைக்கிள் 10 கி.மீ. வேகத்தில் செல்லும். இதனை கடல் மற்றும் குளங்களில் மூழ்குபவர்களை மீட்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தச் சைக்கிளை கீழக்கரை கடலில் மிதக்கவிட்டு சோதனை செய்தனர். இந்தச் சைக்கிளில் 3 பேர் செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இச்சகோதரர்களுக்கு கீழக்கரை பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து நசுருதீன் கூறுகையில், இந்த சைக்கிளை மேம்படுத்தி பெட்ரோல், டீசலில் இயக்கும் விதமாக வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments