அறந்தாங்கியில் காவல்துறை மற்றும் வர்த்தக சங்கம் இணைந்து பொதுமக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு.!புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவல்துறை மற்றும் வர்த்தக சங்கம் இணைந்து பொதுமக்களிடையே கொரோனா குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வர்த்தக சங்க தலைவர் வரதராஜன் அறந்தை ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் பயணிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி ஆவி பிடிக்கும் எந்திரத்தின் மூலம் பொதுமக்களை  நீராவி பிடிக்க வைத்து கொரோனா குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் அறந்தாங்கி காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரன், உதவி ஆய்வாளர்கள்  ஸ்டீபன், சிவகுமார், இளமாறன் வர்த்தக சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், சலீம்.  காந்தி நாதன் ,செல்வம் சமூக ஆர்வலர்கள்  பசீர் அலி பகதூர்ஷா ,கிரீன் முகமது ,முபாரக் பிச்சை முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments