புதுக்கோட்டை மாவட்டத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி வேளாண் உற்பத்தியினை பெருக்கும் வகையில் ‘நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் வகையில் தேவையான எந்திரங்களை வேளாண் பொறியியல்துறையின் மூலம் மானிய விலையில் வழங்கப்படுவதுடன், விற்பனைக்கு தேவையான உதவிகளையும் வேளாண் விற்பனை குழு மூலம் செயல்படுத்தி வருகிறது.
மாவட்டத்தில் 2016 முதல் நடப்பாண்டு வரை ஆயிரம் எக்டேர் கொண்ட மானாவாரி நிலத் தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.31.41 கோடி மதிப்பீட்டில் பணிகள் செயலாக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டும் எந்திரம் மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது.
இதன்படி விளைப்பொருட்களை சுத்தம் செய்தல், தரம் பிரித்தல் மற்றும் விற்பனைக்கு ஏற்ற வகையில் பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக எந்திரங்கள் கொள்முதல் மற்றும் பணி மூலதனத்திற்கான மொத்த தொகையில் 75 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம் இதில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீத தொகை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்திக் குழு பங்களிப்பாக செலுத்தப்படுகிறது.
நடப்பாண்டிற்கு இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனரையோ அல்லது உதவி செயற்பொறியாளரையோ அணுகி பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.