அறந்தாங்கி காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி.ஆனிவிஜயா ஆய்வு.!அறந்தாங்கியில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படுவர் என்று டி.ஐ.ஜி.ஆனிவிஜயா கூறினார்.

அறந்தாங்கி பஸ் நிலையத்தில் காவல் உதவி மையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தற்போது அனைத்து காவல் நிலையங்களிலும் வரப்படும் புகார்களுக்கு புகார்தாரர்கள் இருக்கும் இடத்துக்கே போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி தீர்வு கண்டு வருகின்றனர்.

கோவில் திருவிழாக்களில் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்க சிறப்பு போலீஸ் பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அறந்தாங்கி பகுதிக்கு போக்குவரத்து போலீசார் கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள வளாகத்தில் மரக்கன்று நட்டார். ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன் உள்ளிட்ட போலீசார் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments