ஆவுடையார்கோவிலில் இந்திய தொழில் சங்க மையம் சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க கிளை தொடக்கம்ஆவுடையார்கோவிலில் இந்திய தொழில் சங்க மையம் சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க கிளை தொடக்க விழா நடைபெற்றது. இதையொட்டி சங்க கொடியை சங்க மாவட்ட தலைவர் ஜின்னா ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் முருகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆவுடையார் கோவில் மீமிசல் சாலையில் ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்க கொடியேற்றுதல் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா ஆட்டோ சங்கத் தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிங்கமுத்து கொடியேற்றினார். 

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கணேசன் பெயர் பலகை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments