கோபாலப்பட்டிணத்தில் 1-வது, 5-வது மற்றும் 11-வது படிக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்.!கோபாலப்பட்டிணத்தில் 1-வது, 5-வது மற்றும் 11-வது படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வருடாந்திர தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பள்ளி கூடங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 1-வது, 5-வது மற்றும் 11-வது படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வருடந்தோரும் பள்ளி கூடங்களில் வைத்து போடப்படும் தடுப்பூசியானது இன்று முதல் 19/10/2020 (திங்கட்கிழமை) வருகிற 22/10/2020 (வியாழக்கிழமை) மற்றும் 23/10/2020 (வெள்ளிக்கிழமை) என வாரத்தில் மூன்று நாட்களில் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமானது இந்தவாரம் முழுவதும் அவுலியா நகர் அங்கன்வாடி கட்டிடத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

கீழ்கண்ட வயதுடைய மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

1 வகுப்பு - (5 வயது முதல் 6 வரை)

5 வகுப்பு - (10 வயது முதல் 11 வரை)

11 வகுப்பு - (15 வயது முதல் 16 வரை)

எனவே கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மேற்கண்ட வயதுடைய பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த மருத்துவ முகாம் வருகிற டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments