ஓர் ஆண்டாக பல உயிர்களை காப்பாற்றி இரண்டாம் ஆண்டை தொடங்கும் கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் சேவை..
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி  ஊராட்சி கோபாலபட்டினத்தை சேர்ந்த சில மண்ணின் மைந்தர்களால் கடந்த 2015 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஊருக்கு ஏதாவது நம்மால் முடிந்த அளவு நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பு தான் GPM மக்கள் மேடை என்ற அமைப்பாகும்.கடந்த வருடம் 19.10.2019 அன்று GPM மக்கள் மேடை சார்பாக மற்றுமொறு கனவுத் திட்டமான நமது ஊர் மக்களுக்கும் சுற்றுவட்டார மக்களுக்கும் பயன்பெற கூடிய வகையில் மனிதர்களை மதிப்போம் மனித உயிர்களைக் காப்போம் அனைத்து சமுதாய மக்களுக்காக GPM மக்கள் மேடையால் மாபெரும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.

அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு க. நவாஸ் கனி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அன்று முதல் இன்று வரை 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து  உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.

இந்த கொரோனா காலகட்டத்திலும் GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் தனது சேவையை நிறுத்தாமல் மாவட்டத்திற்குள் அனைத்து நோயாளிகளையும் ஏற்றி தனது சேவையை செய்து கொண்டிருக்கின்றன.

 கடந்த வருடம்  19.10.2019 அன்று அர்ப்பணிக்கப்பட்டது 23.10.2019 புதன்கிழமை அன்று GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் தனது முதல் சேவையை தொடங்கியது.  GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அசாருதீன் அவர்கள்  மிக சிறப்பாக மூன்று நபரின் உயிர்களை காப்பாற்றி உள்ளார். மணமேல்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் அவர்கள் GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் நீங்கள் சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்துள்ளீர்கள் இந்த இளம் வயதில் உங்கள் சேவையை பாராட்டுக்குரியது என்று வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.


மணமேல்குடியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரும் GPM மக்கள் மேடையின் ஆம்புலன்ஸ் சேவையில் சிறந்து விளங்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மீமிசல் காவல் நிலையம் சார்பாக 27.01.2020  திங்கள் கிழமை அன்று பொதுமக்களுக்கு விபத்து காலத்தில் முதலுதவி எவ்வாறு செய்ய வேண்டும் என்று GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அசாருதீன் அவர்கள் பொது மக்களுக்கு விளக்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments