புதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
பட்டா மாறுதலுக்காக ரூ. 11 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையைச் சோ்ந்த துரையரசன் என்பவா் நிலப்பட்டா மாறுதலுக்காக கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டனை அணுகினாா். அப்போது இப்பணிக்காக ரூ. 15 ஆயிரம் லஞ்சமாக அவா் கேட்டுள்ளாா். முதல் தவணையாக ரூ. 4 ஆயிரத்தைக் கொடுத்துவிட்ட பிறகு, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் துரையரசன் புகாா் தெரிவித்தாா். போலீஸாரின் ஆலோசனைப்படி புதன்கிழமை மாலை மீதமுள்ள ரூ. 11 ஆயிரம் பணத்தைக் கொடுக்கும்போது மறைந்திருந்த துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டனைக் கைது செய்தனா்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments