நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கிராம ஊராட்சிக் குழுக்கள் அமைக்க வேண்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் வேண்டுகோள் கூட்டம் நடத்த வார்டு உறுப்பினர்கள் மனு.!



நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கிராம ஊராட்சிக் குழுக்கள் அமைக்க வேண்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் வேண்டுகோள் கூட்டம் நடத்த வேண்டி வார்டு உறுப்பினர்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கட்டாய கடமைகளின் ஒன்றான குடிநீர் சம்மந்தமாக குழுக்கள் அமைப்பது பற்றி விவாதிக்க ஊராட்சி நிர்வாகம் கூட்டத்தை கூட்ட வேண்டி 7-வது வார்டு உறுப்பினரான சாதிக் பாட்சா, 5-வது வார்டு உறுப்பினரான ராஜபு நிசா, 6-வது வார்டு உறுப்பினரான பெனாசிா் பேகம், 9-வது வார்டு உறுப்பினரான மல்லிகா மற்றும் 12-வது வார்டு உறுப்பினரான பிரேமா ஆகியோர் ஒன்றிணைந்து வேண்டுகோள் கூட்டம் நடத்த வேண்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் 28.10.2020 அன்று மனு அளித்தனர்.

வேண்டுகோள் கூட்டம் என்றால் என்ன.?

(ஊராட்சியில் 1/3 க்கு குறையாத உறுப்பினர்கள் என்ன பொருள் பற்றி பரிசீலனை செய்ய கூட்டம் கூட்ட வேண்டும் என்ற விபரத்துடன் தலைவருக்கு 7 முழு நாட்கள் கால அவகாசம் கொடுத்து அறிவிப்பு கொடுத்து தலைவர் 48 மணி நேரத்திற்குள் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டத்தை கூட்டா விட்டால் அங்கத்தினரே கூட்டத்தை கூட்டலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments