ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய 30-ந் தேதி கடைசி நாள்விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பருவம் தவறி பெய்யும் மழை மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்படும் இழப்பினை இத்திட்டம் ஈடுசெய்யும். விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேசியமயமாக்க வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் பயிர் காப்பீடு தொகையை செலுத்தி காப்பீடு செய்யலாம். 

அதற்கு நில சிட்டா அடங்கல், ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல் இவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். காப்பீடு செய்ய வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். கடைசி நாள் வரை காத்திராமல் உடனடியாக பயிர் காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments