அமைதியை கெடுப்பவர்களை தமிழகமக்கள் அனுமதிக்க_மாட்டார்கள்!




அமைதியைகெடுப்பவர்களைதமிழகமக்கள்அனுமதிக்க_மாட்டார்கள்!

அறந்தாங்கியில் மஜக மாவட்ட அலுவலகத்தைதிறந்து வைத்து பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLAபேட்டி!


புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகத்தை அறந்தாங்கியில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம். தாஜுதீன், மாநில துணைச் செயலாளர் துரை முகம்மது, மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம், மாவட்டச் செயலாளர் அறந்தாங்கி முபாரக் ஆகியோர் உடன் இருந்தனர்.

அங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது.

அதில் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள், அறந்தாங்கியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

அமைதிப் பூங்காவான தமிழகத்தை அமளி துமளியாக்கி விட சிலர் துடிக்கிறார்கள். இதை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றவர், தமிழகத்தில் பெரியாரிசம், அண்ணாயிசம், கம்யூனிசம், தமிழ் தேசியம் ஆகியவற்றை எதிர்ப்பவர்கள் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும் கூறினார்.

பிறகு தொண்டர்களுடன் உரையாடி, கட்சி வளர்ச்சி குறித்து கேட்டறிந்தார்.

பிறகு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின்( MJTS) பெயர் பலகையை திறந்து வைத்து, நகரில் 4 இடங்களில் மஜகவின் கொடிகளை ஏற்றி வைத்தார்.



முன்னதாக நகரின் முக்கிய வீதிகள் வழியே மஜக கொடிகளுடன் வாகன அணிவகுப்பும் நடைபெற்றது.

அலுவலக திறப்பு விழா பகுதி மஜக தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அலுவலக திறப்பு விழாவிற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்களும் வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஒளி முகம்மது, செய்யது அபுதாஹிர், ஷாஜுதீன், நகர செயலாளர் ஜலாலுதீன், நகர பொருளாளர் அப்துல் கரீம், IKP மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் நாகூர்கனி, MJTS மாவட்ட தலைவர் முகம்மது குஞ்சாலி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#புதுக்கோட்டைகிழக்குமாவட்டம்
31-10-2020
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments