புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொடியேற்றினார்.
            புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

                    மஜகவின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாம் குறித்த இந்த  விழிப்புணர்வு பயணத்தில், அவருடன் மாநிலச் செயலாளர்  நாச்சிக்குளம் தாஜ்தீன், விவசாய அணி மாநிலச் செயலாளர் அப்துல் சலாம், மாவட்ட செயலாளர் அறந்தாங்கி முபாரக்  ஆகியோரும் பங்கேற்றனர்.

கிழக்கு கடற்கரை சாலை உட்பட 130 கிலோ மீட்டர் தூரம், 4 மணி நேரம் நடைபெற்ற தொடர்ச்சியான இந்நிகழ்வில் , 15 இடங்களில் மஜக கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டது. மஜக வினர் திரளானோர் ஏராளமான வாகனங்களில்  பங்கேற்றனர்.

மீமிசல் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் ஒன்றிய அலுவலகங்களும் திறந்து வைக்கப்பட்டது.

கட்டு மாவடி, ஏகனி வயல்,நாகுடி, அறந்தாங்கி, ஆவுடையார் கோயில், ஜெகதா பட்டினம், கோட்டை ப்பட்டினம், அம்மா பட்டினம் ஆகிய ஊர்களை தொடர்ந்து மீமிசல் பஸ்டான்ட்டில் கொடியேற்றினார், மீமிசல் கடைவீதியில் LSR வணிகவளாகத்தின் மேல்தளத்தில் ஆவுடையார் கோவில் ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்தார், கோபாலப்பட்டினம் ஸ்டேட் பேங்க் அருகில் கொடியேற்றினார்.  

ECR சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், காவல் துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.

இந்நிகழ்ச்சிகளில்மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் தலைவர் முகம்மது குஞ்சாலி, பொருளாளர் இர்ஷாத் அகமது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகம்மது யாசின், இளைஞர் அணி செயலாளர் வாசிம் அக்ரம், பொருளாளர் முஸ்தமீன், துணைச் செயலாளர்கள் முகம்மது அல்காப், முகம்மது அலியார், வர்த்தக சஅணி மாவட்ட பொருளாளர் அன்சாரி, துணைச் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் அப்துல்லாஹ், ஒன்றிய பொருளாளர் அஜ்மீர் கான் மற்றும் ஒன்றிய அணி நிர்வாகிகள் உட்பட கிளை நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments