கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கலெக்டரிடம் புகார்



     

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியகுழு தலைவரான தனக்கு ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் எந்த தகவலும் தெரிவிப்பதில்லை என்றும் தன்னாட்சி அதிகாரம் போல், பெண்ணை மதிப்பதில்லை என்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து மனுவில் கூறியுள்ளதாவது, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் மாலா ராஜேந்திதுரை ஆகிய் நான் கணவாரால் கைவிடப்பட்டவர் ஆவேன். நான் தலைவராக பொறுப்பேற்று 10 மாதங்களுக்கு மேலாகிறது. அன்று முதல் மக்கள் நலப்பணிகளிலும் அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். 

இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் சுகாதார நடவடிக்கைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நெறிமுறைகள் குறித்து அவ்வப்போது மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட திட்ட அலுவலருக்கும் கடிதம் அனுப்பி நடந்து வரும் அனைத்து திட்டங்களும், மக்களிடம் விளக்கி கட்சி பாகுபாடின்றி அயராது உழைத்து வருகிறேன். ஆனால் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் மற்றும் கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் என்னை ஒன்றியக்குழு தலைவர் என்ற முறையில் எவ்வித நடவடிக்கை எடுத்தாலும் கலந்தாலோசிப்பது இல்லை.
 
மேலும் வளர்ச்சிப்பணிகள் ஆய்வு, கட்டடங்கள் திறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு எனக்கு தகவல் தராமல் இருவரும் மக்கள் பிரதிநிதிகள் போல் விழாக்களை நடத்தி திறந்து வைக்கின்றனர். நான் ஒரு பெண் பிரதிநிதி என்பதால் என்னை அவமதிக்கும் விதமாக இருவரும் நடந்து கொள்கின்றனர். அக்டோபர் மாதத்தில் நடந்த கறம்பக்குடி ஒன்றியம், புதுவிடுதி ஊராட்சியில் சுமார் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை எனக்கு தகவல் தெரிவிக்காமல் தலைவர் போல திறந்து வைத்துள்ளார். மேலும் எங்கு எதை செய்தாலும் என்னிடம் தகவல் தெரிவிப்பதில்லை என கூறப்படுகிறது. 

அது போல் ஒன்றிய அலுவலகத்திற்கு அருகே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மின்வாரியம் முன் அமைக்கப்பட்ட மின்மாற்றியை அவர்களே இயக்கி வைத்துள்ளார்கள். இதுபோல் கடந்த பல மாதங்களாகவே நான் அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். மேலும் தற்போது ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட பசுமை வீடு திட்டம் 27 வீடுகள் ஒதுக்கப்பட்டது. இந்த 27 வீட்டையும் அமைச்சர் ஒன்றிய தலைவருக்கு அனைத்து வீட்டையும் அவரது பெயரில் எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளார். பெண் பிரதிநிதிகள் தங்கள் உறவினர்களை வைத்து அதிகாரம் செலுத்தி வரும் உள்ளாட்சி அமைப்புகளை கணவனை இழந்த நான் தனியாக நின்று போராடிக் கொண்டிருக்கிறேன். 

எனவே ஒன்றியக்குழு தலைவர் ஆகிய என்னை உதாசீனப்படுத்தும் கறம்பக்குடி யூனியன் அதிகாரிகள் காமராஜ் மற்றும் ரவி மீது உரிய நடவடிக்கை எடுத்து ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments