வடகாடு அருகே புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் முளைத்த புற்கள்.! 

               
வடகாடு அருகே உள்ள கீழாத்தூர் தெற்கு கடைவீதியில் இருந்து குடியிருப்பு பகுதி வழியாக கீழாத்தூர் கிழக்கு பகுதி சாலை வரை புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சாலையோரத்தில் கிராவல் மண் கொட்டும் பணிகள் நடந்து வருகிறது.இந்த சாலையானது சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, புற்கள் வளர தொடங்கி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய பெய்துள்ளது. தரமில்லாத சாலை அமைத்துள்ளதாகவும் இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான சாலை அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments