சவுதி அரேபியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிம்மதி!! கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் அறிவிப்பு





வேலைகளை மாற்றுவதற்கான சுதந்திரம் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களின் ஒப்பந்த கட்டுப்பாடுகளை சவுதி அரேபியா தளர்த்தும் என்று நாட்டின் மனிதவள துணை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

மார்ச் 2021-ல் நடைமுறைக்கு  வரும் இந்த திட்டங்களில், வெளிநாட்டு தொழிலாளர்கள் முதலாளிகளின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறும் உரிமை அடங்கும் என மனிதவள துணை அமைச்சர் அப்துல்லா பின் நாசர் அபுத்னைன் கூறினார்.


சவுதி அரேபிய  தொழிலாளர் சந்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என அப்துல்லா பின் நாசர் அபுத்னைன் கூறினார்.

சவுதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், தொழிலாளர் சந்தையை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளில் செயல்படுவதாகவும், திட்டங்கள் தயாரானவுடன் அறிவிக்கப்படும் என கடந்த வாரம் சவுதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது உள்ள  கஃபாலா அமைப்பு பொதுவாக ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளியை ஒரு முதலாளியுடன் பிணைக்கிறது. தொழிலாளர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகக்கூடிய அந்த அமைப்பை முடிவுக்கு கொண்டுவர அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட உரிமைக் குழுக்கள் சவுதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

புதிய முயற்சியாக முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவை அரசாங்கத்தால் சான்றளிக்கப்பட வேண்டிய ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கும், மேலும் கட்டாய முதலாளிகளின் ஒப்புதலுக்குப் பதிலாக, மின்-அரசு போர்டல் வழியாக சேவைகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்க தொழிலாளர்களை அனுமதிக்கும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments