கோபாலப்பட்டிணத்தில் வெளுத்து வாங்கிய மழை..! கடற்கரை , ஈத்கா மைதானத்தில் குளம் போல் தேங்கிய மழை நீர்…!!



   
கோபாலப்பட்டிணத்தில் வெளுத்து வாங்கிய மழை..! கடற்கரை , ஈத்கா மைதானத்தில்  குளம் போல் தேங்கிய மழை நீர்…!!

வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 06-11-2020  வியாழக்கிழமை  அதிகாலை பெய்த  மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து கொட்டித்தீர்த்தது. இந்த மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. 
 
GPM கடற்கரை, ஈத்கா மைதானம்

கோபாலபட்டிணத்தில்முக்கிய பகுதிகளிலான.கடற்கரை, ஈத்கா மைதானம் போன்ற இடங்களில் மழை நீர் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இடமே வெள்ளகாடாக காட்சியளித்தது.

மேலும் இந்த மழையால் கோபாலபட்டிணத்தில்
முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. நீா்வரத்து ஓடைகளில்,தாழ்வான பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.

மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்..தொடர்ச்சியாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த இந்த மழை மண்ணை மட்டுமின்றி கோபாலப்பட்டிணம் மக்களின் மனதையும் குளிர வைத்து சென்றது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments