புதுக்கோட்டை நகராட்சி ஆணையரை கண்டித்து பணியாளர்கள் போராட்டம்புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா. இவர், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதப்படுத்துவதாகவும், இரவிலும் பணியாளர்களிடம் வேலை வாங்குவதாகவும், ஒப்பந்தப் பணிகளுக்கு உரிய நேரத்தில் தொகையை விடுவிப்பதில்லை என்றும் கூறி நகராட்சிப் பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் தனித்தனியாக நகராட்சி அலுவலகம் அருகே நேற்று இரவு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள கடைகளுக்கு உரிய காலத்தில் வாடகை செலுத்தவில்லை எனக்கூறி பூட்டப்பட்ட 7 கடைகளை திறக்கக் கோரி, கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், கோட்டாட்சியர் தண்டாயுதபாணி சமாதானம் செய்து, சாலை மறியலில் ஈடுபட்டோரை கலைந்துபோகச் செய்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments