NPCI அனுமதியை பெற்றது Whatsapp Pay.. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தகவல்..




பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் சேவையின் யுபிஐ கட்டண இன்டெர்பேசான வாட்ஸ்அப் பே இறுதியாக அதன் சேவைகளை இந்தியாவில் வழங்க இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (National Payments Corporation of India, NPCI) (என்.பி.சி.ஐ) அனுமதியைப் பெற்றுள்ளது.

வாட்ஸ்-அப்பின் கட்டணமுறை அதன் சேவைகளை இந்தியாவில் ஒரு சோதனை அடிப்படையில் சில காலத்திற்கு முன்பு தொடங்கியது. ஆனால் தரவு களமயமாக்குதல் மற்றும் தொடர்புடைய காரணிகளைப் பற்றிய கவலைகள் காரணமாக இதுவரை NPCI இன் அனுமதியைப் பெற தவறிவிட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது NPCI-ன் அனுமதியை வாட்ஸ்அப் பே பெற்றிருந்தாலும் அது முழுமையாக இல்லை. அதாவது, வாட்ஸ்அப் அதன் சேவைகளை தரப்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்த மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.



அந்த வகையில் இந்தியாவில் அதன் பொது வெளியீட்டின் ஒரு பகுதியாக, முதல் தொகுதியில் 20 மில்லியன் பயனர்களுக்கு
வாட்ஸ்அப் பே அறிமுகப்படுத்தப்படும். அந்த முதல் இருபது மில்லியன் வாட்ஸ்அப் பே பயனர்களில், ஏற்கனவே அதன்
சோதனைக் கட்டத்தில் சேவைக்காக பதிவுசெய்தவர்கள் உள்ளடங்கியிருப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments