வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு 7 நாள் கட்டாய ‘தனிமை’க்கு விலக்கு : மத்திய அரசு அறிவிப்பு 

   
        புதுடெல்லி: வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு 7 நாட்கள் கட்டாய ‘தனிமை’ அமலில் இருந்த நிலையில், தற்போது அந்த முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தீவரம் அதிகமாக இருந்தபோது, வெளிநாட்டில் இருந்து  மத்திய அரசால் அழைத்து வரப்பட்டவர்கள், சொந்த முறையில் வெளிநாட்டில்  இருந்து இந்தியா வந்தவர்கள் தங்களது வீட்டிலேயே 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் முறை அமலில்  இருந்தது. அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் சுகாதாரத் துறையிடம்  தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். தற்போது கொரோனா  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வெளிநாட்டில் இருந்து ​​விமான நிலையம் வரும்  அனைத்து பயணிகளும், ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் முறை அமலில் உள்ளது.

இந்நிலையில், தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில், ‘வெளிநாட்டு பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மற்றும் எதிர்மறை (நெகடிவ்) உள்ளவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் முறை அமலில் இருந்தது. இப்போது அந்த விதிமுறைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அவ்வாறு விமான நிலையத்தில் சோதனை நடத்தி, அவர்களுக்கு நெகடிவ் ரிசல்ட் வந்தால், அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. கொரோனா பரவல் நிலைமையை பொறுத்து, மாநில அரசுகள் தங்களின் தேவைக்கேற்ப மேற்கண்ட விதிகளை மாற்றிக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments