புதுக்கோட்டையில் நாளை கருணாநிதி சிலை திறப்பு தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது 

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 நாளை (2-11-2020) திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் காணொளி காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் புதுக்கோட்டை வடக்குராஜ வீதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கருணாநிதி திருவுருவ சிலை மற்றும் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட கழக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமை வகிக்கிறார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் வரவேற்புறையாற்றுகிறார்.

அதனை தொடர்ந்து புதுக்கோட்டை-மதுரை சாலை மாலையீடு அருகில் உள்ள கற்பக விநாயக மஹாலில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியும், மிசா சட்டம் மற்றும் சட்ட எரிப்பு நகலில் சிறை சென்றவர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் தலைவர் கலைஞர் பெயரில் தியாக செம்மல் விருதும், அதேவேளையில் கழகத் தலைவர் தளபதி சிறப்புரையாற்ற “தமிழகம் மீட்போம்” சிறப்பு பொதுக் கூட்டம் புதுக்கோட்டை தெற்கு, வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் 600 இடங்களில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் புதுக்கோட்டை தெற்கு, வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒன்றியக்குழு தலைவர்கள் மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட அணி ஒன்றிய அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கழக மூத்த முன்னோடிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து காணொளி காட்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments