அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் சாலையோரம் தொங்கும் வயரால் விபத்து அபாயம்: அப்புறப்படுத்த கோரிக்கை         அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் கடந்த பல நாட்களாக கீழே தொங்கும் வயர்களால் விபத்து நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவடடம், அறந்தாங்கி நகரின் முக்கிய சந்திப்பாக கட்டுமாவடி முக்கம் விளங்குகிறது. நகரின் முக்கிய வர்த்தக பகுதிகளுக்கு செல்ல  கட்டுமாவடி முக்கம் வழியாகவே செல்ல வேண்டும். மேலும் இப்பகுதியில் 2 பெட்ரோல் பங்குகள் உள்ளதால், தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள்  கட்டுமாவடி முக்கத்தை கடந்து செல்கின்றன. 
     இந்த நிலையில்    கட்டுமாவடி முக்கம் பகுதியில் சாலை ஓரத்தில் கடந்த பல நாட்களுக்கு முன்பு வயர்  ஒன்று உயரத்தில் கட்டப்பட்ட கட்டு அவிழ்ந்து, வயர் சாலையின் ஓரம் தொங்குகிறது. சாலையின் ஓரத்தில் கீழே தொங்கும் வயரில் அவ்வழியே  வாகனங்களில் செல்வோர் சிக்கி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் நிலையூர் கணேசன் கூறியது:அறந்தாங்கி நகரின் முக்கியப் பகுதியான கட்டுமாவடி முக்கம் பகுதியில் மேலே கட்டப்பட்ட வயர்கள், தற்போது பல நாட்களாக கீழே கைக்கு எட்டும்  தூரத்தில் தொங்குகின்றன. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் இந்த வயரில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இந்த வயர்  குறித்து அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கீழே தொங்கும் வயரால் விபத்து நேரும் முன்பு அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.எனவே, அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் கேட்பாரற்று விபத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படுத்தும் வகையில் தொங்கும் வயரை  அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments