அறந்தாங்கி வருவாய் கோட்டத்திற்க்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு தேர்வு.!அறந்தாங்கி வருவாய் கோட்டத்திற்க்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு தேர்வு அறந்தாங்கி அரசு அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கிராம சுகாதாரம், கிராம நிர்வாக அலுவலரின் அதிகாரங்களும் கடமைகளும், கிராம கணக்கு நடைமுறை நூல் என மூன்று பிரிவுகளாக தேர்வுகள் நடைபெற்றது. 

இதில் 47 கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். தேர்வு மையத்தை அறந்தாங்கி உதவி கலெக்டர் ஆனந்த் மோகன் ஆய்வு செய்தார். 

ஆய்வின் போது துணை கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் கண்ணன், அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், டவுன் கிராம நிர்வாக அலுவலர் மோகன் ஆகியோர் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments