ஆவுடையார்கோவிலில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் வட்டார வள மையத்தின் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
வட்டார வளமைய மேற்பார்வையாளர் அனிதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் தேவகி வட்டார வள மைய மாணவர்களுக்கு சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவரால் வழங்கப்படும் பயிற்சிகள் பற்றி எடுத்துரைத்தார். இதில் மாணவர்களின் பெற்றோர், வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments