ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் கணவரின் தலையீடு.! பறந்த புகார் மனு.!! விசாரணைக்கு அழைப்பு.!!!விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், செங்குன்றாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த திரு.M.முத்துக்குமார் என்பவரால் செங்குன்றாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் மூலம் விசாரணைகள் இன்று 19.11.2020 நடைபெற உள்ளது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் செங்குன்றாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை தனது கணவரின் மூலம் வழிநடத்திக் கொண்டிருக்கின்ற ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் வரப்பெற்றது - 19.11.2020 அன்று மாலை 05.30 மணிக்கு நடைபெறும் விசாரணைக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), சம்பந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செங்குன்றாபுரம் கிராம ஊராட்சி தலைவர், செங்குன்றாபுரம் கிராம ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி செயலர் மற்றும் மனுதாரர் ஆகியோர் நேரில் ஆஜராக தெரிவித்தல் - தொடர்பாக

1. பதிவாளர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தாக்கீது எண் SHRC No.5097/2020/C3. சென்னை அவர்களிடமிருந்து வரப்பெற்ற கடிதம்

திரு.M.முத்துக்குமார், த/பெ முனியாண்டி, 2/297, செங்குன்றாபுரம், விருதுநகர் புகார் மனு நாள் 27.06.2020.

மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதி நாள்: 10.11.2020

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், செங்குன்றாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த திரு.M.முத்துக்குமார் என்பவரால் செங்குன்றாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் மூலம் விசாரணைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் புகார் மனு தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நேரடியாக விசாரணை மேற்கொள்ள இருப்பதால், வரும் 19.11.2020 அன்று மாலை 05.30 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments