ஊராட்சி மன்ற தலைவரின் மெத்தன போக்கால் கோபாலப்பட்டிணம் பழைய காலனி பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்.! நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளியேற்றம்.!!கோபாலப்பட்டிணம் பழைய காலனி பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீரை 17.11.2020 அன்று ஊராட்சி மன்ற செயலாளர் தலைமையில் வெளியேற்றும் பணி மற்றும் தற்காலிக வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் உள்ள கோபாலப்பட்டிணம் பழைய காலனி தெருவில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள் அடைபட்டுவிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மழை நீர் வீட்டுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். 

இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த லேசான மழையின் போது குடியிருப்புக்குள் தேங்கி நின்ற மழைநீர் புகைப்படங்களை அனுப்பி ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்திருந்தார். அதன்பிறகு இரண்டு முறை ஊராட்சி மன்ற தலைவர் அங்கு சென்று பார்வையிட்டு சரி செய்து தருகிறோம் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அதன் பிறகு எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் நேற்று 17.11.2020 ஊராட்சி மன்ற செயலாளரிடம் புகார் மனு அளித்தார். புகார் மனுவை பெற்ற ஊராட்சி மன்ற செயலாளர் புகார் மனுவின் மீது உடனடி நடவடிக்கையாக அன்றே JCB இயந்திரம் மூலம் அந்த பகுதியில் மழைநீர் வெளியேறுவதற்கு சிறிய வாய்க்கால் அமைக்கும் பனி ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் 7-வார்டு உறுப்பினரான சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. 

அப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஊராட்சி மன்ற செயலாளர் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் ஊராட்சி செயலாளர் ஸ்டெல்லா அவர்களின் பணி சிறக்க GPM மீடியா-வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பு: நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் பற்றி புகார் எதுவும் இருப்பின் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் நீங்கள் கொடுக்கும் புகார் மனு மற்றும் புகைப்படங்களை GPM மீடியா-விற்கு அனுப்பினால் செய்தியாக வெளியிடப்படும். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments