கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் கவனத்திற்கு... 18 வயது ஆகிவிட்டதா..? நவ.21,22-ல் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்த முகாம்.!!



வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் மற்றும் நீக்கம் செய்வதற்காக வருகிற நவ-21 (நாளை) மற்றும் நவ-22-ஆம் (நாளை மறுநாள்) தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பொதுமக்களின் பார்வைக்கு நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் இருந்தால் உரிய படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வருகிற டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மற்றும் வாக்குச்சாவடி மைய அலுவலா்களிடம் வழங்கலாம்.

மேலும் பொதுமக்கள் நலன் கருதி வருகிற நவ.21 மற்றும் நவ.22-ந் தேதியும் 2 நாட்கள் வாக்காளா்கள் சோ்ப்பு குறித்த சிறப்பு முகாம் நடைபெறுகின்றன.

சிறப்பு முகாம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. 
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்: 
21.11.2020, 
22.11.2020,
12.12.2020,
13.12.2020

அதனைத்தொடர்ந்து நாளை 
நாள்: 21/11/2019 சனிக்கிழமை மற்றும் 22/11/2019 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம்: ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்:

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1

முகவரி சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.பாஸ்போர்ட்

2.கேஸ் பில்

3.தண்ணீர் வரி ரசீது

4.ரேஷன் அட்டை

5.வங்கி கணக்கு புத்தகம்

6.ஆதார் கார்டு

வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.10ம் வகுப்பு சான்றிதழ்

2.பிறப்பு சான்றிதழ்

3.பான் கார்டு

4.ஆதார் கார்டு

5.ஓட்டுனர் உரிமம்

6.பாஸ்போர்ட்

7.கிசான் கார்டு

அடையாள சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.பான் கார்டு

2.ஓட்டுனர் உரிமம்

3.ரேஷன் கார்டு

4.பாஸ்போர்ட்

5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்

6.10ம் வகுப்பு சான்றிதழ்

7.மாணவர் அடையாள அட்டை

8.ஆதார் கார்டு

ஒவ்வொரு வாக்குச்சாவடி மைய அலுவலர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் முகவரி மாற்றம் திருத்தம், பெயர் நீக்கம் குறித்து கண்டறிந்து உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் பெறக்கூடிய மனுக்களில் பெயர் நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் குறித்த மனுக்களுக்கு உடனடியாக களப்பணி மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே 18 வயது பூர்த்திடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் இதுவரை வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments