புதுக்கோட்டையில் Dyfi சார்பில் மின் வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்.!இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரை.நாராயணன் தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொருளாளர் இளமாறன், நகரத் தலைவர் விக்கி, செயலாளர் பாபு, பொருளாளர் ஏ.டேவிட் உள்ளிட்டோர் பேசினர். 

தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments