தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு ரியாத் மண்டல தமுமுக குர்நாதா & நஸீம் கிளை மற்றும் கிங் பஹத் மெடிக்கல் சிட்டி இரத்த வங்கி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 20/11/2020 வெள்ளிக்கிழமை அன்று குர்நாதா பகுதியில் உள்ள கஃர்ணி பள்ளி வளாகத்தில் நடமாடும் இரத்த வங்கி வாகனம் மூலம் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமிற்கு மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது, மண்டல பொருளாளர் ஜர்ஜீஸ் அஹமது, மண்டல மமக செயலாளர் ஆரூர் நிசார் அலி, மண்டல துணைத் தலைவர் செங்கோட்டை அப்துர் ரஹீம், மண்டல மக்கள் தொடர்பாளர் திருக்கோவிலூர் ஷாக்கிர் பேக் மற்றும் தலைமை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகிக்க, இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளரும் மண்டல சமூகநலத்துறை துணைச் செயலாளருமான அறந்தை சித்திக் அவர்களும், ரியாத் மண்டல மருத்துவரணி செயலாளர் மங்களகுடி தாஹா ரசூல் அவர்களும் மண்டல நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
இந்த இரத்ததான முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் பங்கேற்று இரத்ததானம் வழங்க முன் வந்தனர். ஆனால் நேரமின்மை காரணமாக 94 சகோதரர்கள் மட்டும் தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர். மேலும் சிலர் காத்து இருக்க உரிய நேரம் கிடைக்காமல் தானம் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பினார்கள்.
இரத்ததான கொடையாளர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும், இரத்தவங்கி ஊழியர்களுக்கும் காலை மற்றும் மதிய உணவு, தேநீர், பழச்சாறு, தண்ணீர் மற்றும் பாதுகாப்பு முக கவசம் போன்றவைகளை முகாமின் களப்பணியாளர்களாக செயல்பட்ட தலைமை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து விநியோகம் செய்தனர்.
பொதுமக்கள் யாரையும் நேரடியாக சந்தித்து அழைப்பு பணி செய்ய முடியாத சூழ்நிலையில் தொலைப்பேசி வாயிலாகவும் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் குர்நாதா கிளை தலைவர் அப்துல்லா, குர்நாதா கிளை தமுமுக செயலாளர் ஷேக் மைதீன் பாதுஷா, குர்நாதா கிளை தமுமுக துணைச் செயலாளர் JMR மற்றும் நஸீம் கிளை தலைவர் மெளலவி அலி உஸ்மான், நஸீம் கிளை தமுமுக செயலாளர் ரஹ்மத்துல்லா, நஸீம் கிளை மமக செயலாளர் செளகத் அலி, கிளை பொருளாளர் மௌலவி முஸ்தாக் ஆகியோர் சிறப்பான முறையில் அழைப்பு பணியில் ஈடுபட்டனர் என்று கூறினால் மிகையாகாது.
ரியாத் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சாகுல் ஹமீது அவர்களும், ரியாத் தமிழ் அமைப்பு பிரமுகர் சுரேஷ் குமார் அவர்களும், சமுதாய ஆர்வலர் சேலம் நூர் அவர்களும் இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் தங்களுடைய இரத்தத்தையும் தானமாக வழங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரத்ததான முகாமை ஒருங்கிணைத்த சகோதரர்களுக்கும், முகாமிற்கான உணவு எற்பாடு செய்த குர்நாதா & நஸீம் கிளை சகோதரர்களுக்கும், வாகனம் ரீதியாக உதவி புரிந்த சுலைமானியா கிளை தமுமுக செயலாளர் மங்களக்குடி நிஜாமுதீன், சுலைமானியா கிளை துணை தலைவர் ஷெரீப், கிளை பொருளாளர் அபூதாலிப் , பத்தாஹ் கிளை தலைவர் தாஜுதீன் ஆகியோருக்கும், பல கிளைகளிலிருந்து இரத்ததான முகாமிற்கு வருகை புரிந்த சகோதரர்களுக்கும், களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும், ஊடக ரீதியாக உதவி செய்த ரியாத் மண்டல ஊடகப்பிரிவு செயலாளர் திருச்சி ரஹ்மத்துல்லா, ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் கோபாலப்பட்டிணம் முஹம்மது ரிஸ்வான் ஆகியோருக்கும், வருகை பதிவேடு பணியை சிறப்பாக முன்னெடுத்து செய்த மண்டல தமுமுக செயலாளர் O.M.ரஹ்மத்துல்லா அவர்களுக்கும்,
இரத்த வங்கி செவிலியர்களுக்கு உதவியாளர்களாக செயல்பட்ட பத்தாஹ் கிளை மமக செயலாளர் சகோ.சாதிக் மற்றும் ரியாத் மண்டல சமூக நலத்துறையை சேர்ந்த சகோ.அக்பர் அவர்களுக்கும், சுலைமானியா கிளை தலைவர் முபீன் அஹமது அவர்களுக்கும், களப்பணியில் சிறப்பாக செயல்பட்ட அஜிஸியா கிளை மமக செயலாளர் சகோ.வினோத் குமார் அவர்களுக்கும், பொருளாதார பங்களிப்பு வழங்கிய தம்பிஸ் உணவகம் மற்றும் SAT கார்கோ நிறுவனத்தாருக்கும், முகாமிற்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்கிய மண்டல - கிளை நிர்வாகிகளுக்கும் ரியாத் மத்திய மண்டலம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இது போன்ற ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
மேலும் இரத்ததானம் வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் ரியாத் மத்திய மண்டலம் சார்பாக பாராட்டு சான்றிதழும், பரிசுப்பையும் வழங்கப்பட்டது. அதே போன்று இரத்த வங்கி ஊழியர்களின் ஒத்துழைப்பை பெருமைபடுத்தும் விதமாக இரத்தவங்கி ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க துவாவுடன் முகாம் இனிதே நிறைவடைந்தது.
உங்கள் அனைவரின் அனைத்து உழைப்புகளையும் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் பொருந்தி கொள்வானாக!!!
தகவல்
தமிழ் தஃவா தமுமுக - மமக
ஊடகப்பிரிவு
மத்திய மண்டலம்
ரியாத் - சவூதி அரேபியா
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.