புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.! மீன்வளத்துறையினர் அறிவிப்பு.!!புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மீன்வளத்துறை இயக்குனர் குமரேசன் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்க கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வங்க கடலின் மைய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. 

எனவே இன்று (நேற்று) முதல் மறு அறிவிப்பு வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். மேலும் ஏற்கனவே கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருக்கும் மீனவர்களுக்கு உடனே தகவல் கொடுத்து கரைக்கு திரும்ப வர செய்ய வேண்டும். 

புயல் முன்னெச்சரிக்கையை தொடர்ந்து கரையோரத்தில் இருக்கும் தங்கள் மீன்பிடி படகுகள், எந்திரம், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments