புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் குழந்தை பாதுகாப்பு அலுவலர் நியமனம்.!புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் குழந்தை பாதுகாப்பு அலுவலர் என்ற பொறுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் ஒரு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடக்க நிகழ்ச்சி புதுக்கோட்டையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார். 

இதில் குழந்தை பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட போலீசாருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது. மேலும் போக்சோ வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வகையில் திறம்பட செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசாருக்கு பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கீதா, செரினாபேகம் உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments