புயல் கடக்கும்போது காற்று எப்படி வீசும்.?வங்கக்கடலில் உருவாகும் ‘நிவர்’ புயல் நிலப்பகுதிக்குள் வந்து, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நாளை (புதன்கிழமை) கரையை கடக்க இருக்கிறது. புயல் கரையை கடக்கும்போதும், அதற்கு முந்தைய நிலையிலும் காற்றின் தன்மை எப்படி இருக்கும்? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

காற்றின் வேகத்தை பொறுத்தவரையில் 24, 25-ந்தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். புயல் கரையை கடக்கக்கூடிய நேரத்தில் கரையை கடக்கின்ற பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 100 கிலோ மீட்டர் முதல் 110 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும், சில நேரங்களில் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இன்றும், நாளையும் தமிழக கடற்கரை பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் சுமார் 2 மீட்டர் உயரம் வரை உயரக்கூடும். மீனவர்கள் வருகிற 25-ந்தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments