புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கியது பேருந்து சேவை.!!புதுக்கோட்டையில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்த பட்டு இருந்தும் குறைந்த அளவிலான பயணிகளால்  பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பேருந்து சேவையை நிறுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகல் ஒரு மணிமுதல் பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

தற்போது நிவர் புயல் கரையை கடந்ததால் தமிழக அரசு மீண்டும் பேருந்து சேவையை தொடங்கலாம் என  உத்தரவிட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பணிமனைகளில் இருந்து ஒவ்வொரு பேருந்தாக பேருந்து நிலையத்திற்கு வந்து  பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தாலும் குறைந்த அளவிலான பயணிகளே பேருந்து நிலையத்திற்கு வந்ததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments