புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற டிச.1-ந் தேதி காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்... கலெக்டர் தகவல்.!!புதுக்கோட்டை மாவட்டத்தில் காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது.
 
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01.12.2020 செவ்வாய்கிழமை அன்று காலை 11 மணியளவில் காணொலிக்காட்சி மூலம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் Zoom App / Google Meet-ல் நடைபெற உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துக்கொள்ளும் வகையில் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு காணொலிக்காட்சி மூலம் இக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயனடையலாம். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments